General20 September 2025

நீரில் வீழ்ந்து உயிருக்குப் போராடிய சிறுத்தை உயிருடன் மீட்பு

அக்கரப்பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் வீழ்ந்து உயிருக்குப் போராடிய சிறுத்தையை இன்று (20) நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.




சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த கால்நடை வைத்தியர் ஒருவர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டார்.



இதன்போது சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறுத்தையை சிகிச்சைக்காக உடவலவ தேசிய கால்நடை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Recomands
Hiru TV News | Programmes