International05 June 2026

போர் செய்யும் நாட்டுடன், கால்பந்து போரில் ஈடுபட தயாராகும் ஈரான்!

அமெரிக்கா-இஸ்ரேல் உடனான போர் உலகக் கிண்ணத்தை எவ்வாறு பாதிக்கிறது: ஈரான் கால்பந்து வீரர்கள் விளக்கம்
உலகக் கிண்ண வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலையாக, உலகக் கிண்ணத்தை நடத்தும் ஒரு நாட்டுடன் போரில் ஈடுபட்டிருக்கும் வேளையிலேயே, ஈரான் அணி உலகக் கிண்ணத் தொடரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 8 முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையும், ஆங்காங்கே வெடிக்கும் மோதல்களும் இந்தப் போர் முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த முடியாத சூழலையே காட்டுகின்றன.

ஈரான் நாட்டின் வீரர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஊழியர்களைப் பொறுத்தவரை, இந்தச் சூழல் அவர்களின் உலகக் கிண்ண தயாரிப்புப் பணிகளைப் பெருமளவில் பாதித்துள்ளது. ஏனெனில், அவர்களின் லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஈரான் அணியினர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக துருக்கியில் தங்கியிருந்து, பெரும்பாலும் அதன் கடலோரப் பகுதியான அந்தால்யாவில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அத்துடன்;, அமெரிக்காவிற்கான விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காகச் சிலர் அந்த நாட்டின் தலைநகரான அங்காராவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கும் சென்றிருந்தனர்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் இந்த உலகக் கிண்ண தொடரில் ஈரான் அணி பங்கேற்குமா என்பது நீண்ட நாட்களாகவே கேள்விகுறியாக நீடித்து வந்தது.

இன்னும்கூட், விசா தொடர்பான இறுதி முடிவுகள் இன்னும் இழுபறியாகவே இருப்பதால், அவர்களின் பங்கேற்பு இதுவரை முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes