General11 June 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அதிகாலை காலமானார்.

சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் திரை உலகப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்தியத் திரைத்துறைக்கு இயக்குநர் பாரதிராஜா ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்குள்ள திண்டுக்கல் - வத்தலக்குண்டு காட்ரோடு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டில் தற்போது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின், இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes