General21 June 2026

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி அபார வெற்றி

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றது.

இதற்கமைய 99 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்தநிலையில் குறித்த தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி தாம் சந்தித்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு Bஇற்கான புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அத்துடன் இலங்கை அணி ஒரே ஒரு வெற்றியை மாத்திரம் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes