General22 June 2026

அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது இஸ்ரேல்!

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் பலவீனமான போர்நிறுத்தம் நிலவி வரும் சூழலில், வடக்கு எல்லைப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

"திங்கட்கிழமை காலை 6 மணி முதல், மோதல் எல்லைப் பகுதியில் (Confrontation Line) விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்" என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு மத்தியிலும், கடந்த சனிக்கிழமை லெபனானில் இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes