General22 June 2026

ஈரான் - பெல்ஜியம் மோதிய போட்டி சமநிலையில் நிறைவு!

கால்பந்து கிண்ணத் தொடரின் 'G' பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் மோதின.

இந்த போட்டியின் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்தத் தொடரில் பெல்ஜியம் அணி சந்திக்கும் இரண்டாவது தொடர்ச்சியான சமநிலை ஆட்டம் இதுவாகும்.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், முற்பாதி ஆட்டம் 0-0 என முடிவடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், போட்டியின் 66ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் நாதன் ங்கோய் (Nathan Ngoy) கடுமையான விதிமீறல் காரணமாக சிவப்பு அட்டை (Red Card) காண்பிக்கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் காரணமாக ஆட்டத்தின் எஞ்சிய பகுதி நேரத்தை பெல்ஜியம் அணி 10 வீரர்களுடன் மட்டுமே எதிர்கொண்டது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால் போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்துகொண்டன.
Related recommendation
Hiru TV News | Programmes