General23 June 2026

அமெரிக்கப் பேச்சுவார்த்தை: ஈரானுக்குக் கிடைக்கும் பாரிய பொருளாதார நன்மை!

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடையும் போது, அதன் நிதி ரீதியான நன்மைகளை ஈரான் பெற்றுக்கொள்ளும் என அமெரிக்கா ஆரம்பம் முதலே தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஈரான் பெரும் பொருளாதாரப் பலனைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் தடைகளுக்குப் பயந்து, கொள்வனவாளர்கள் பின்வாங்கியதால் ஈரான் தனது முசுக எண்ணெயை பெருமளவு விலைக்கழித்து (Discounted rates) விற்க வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது சந்தைக்கான அனுமதி கிடைத்துள்ளதால், அவர்களால் உலகச் சந்தை விலையிலேயே எண்ணெயை விற்க முடிகிறது.

இதன் மூலம் ஈரானுக்கு மில்லியன் கணக்கான கூடுதல் வருமானம் கிடைத்து வருகின்றது.

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து சாதகமாக நகரும் பட்சத்தில், குறிப்பிட்ட சில இலக்குகளை ஈரான் எட்டும்போது மேலும் பல தடைகள் நீக்கப்படும் என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தடைகள் நீக்கப்படும் பட்சத்தில், ஈரானியர்கள் மேலும் அதிக வருவாயை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes