General23 June 2026

செனகல் அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வெற்றி

கால்பந்து தொடரின் குழு 'I' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நோர்வே அணி 3–2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதியின் 43 ஆவது நிமிடத்தில் நோர்வே அணியின் மார்கஸ் ஹோம்கிரென் பெடர்சென் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே எர்லிங் ஹாலண்ட் நோர்வே அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுத் தந்தார்.

இதனைத் தொடர்ந்து செனகல் அணியின் இஸ்மைலா சார் 53 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

எனினும், 58 ஆவது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து நோர்வேயின் முன்னிலையை 3–1 என உயர்த்தினார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் செனகல் அணியின் இஸ்மைலா சார் தனது இரண்டாவது கோலை பதிவு செய்த போதிலும், செனகல் அணியால் ஆட்டத்தை சமன் செய்ய முடியவில்லை.

இறுதியாக நோர்வே 3–2 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.
Related recommendation
Hiru TV News | Programmes