General06 July 2026

பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு - சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு விடயதான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றைய தினம் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேரும் சிறைக்கைதிகள் 19 பேருமாக மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 18 பேர் கம்பஹா, வெலிசர ராகம ஆகிய மருத்துவமனைகளுக்கும் 4 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் நேற்றைய தினமும் சில கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவத்தின் போதும், இரு கைதிகள் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes