General13 July 2026

அன்று எதிர்த்த திட்டங்களையே இன்று அரசாங்கம் அமுலாக்குகிறது

தமது ஆட்சிக் காலத்தில் எதனை எதிர்த்துப் போராட்டம் செய்தார்களோ, அதே விடயங்களைத்தான் இன்று தங்களுடைய திட்டங்களைப் போன்று ஆளும் கட்சியினர் திறந்து வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக்க மத்துகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்கனை நீர்த்திட்டம் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய திட்டமாகும். ஆனால் முன்னர் தற்போதைய அரசாங்க தரப்பினர் எதிர்த்தமையின் விளைவாகவே அது தடைப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes