General15 May 2021

சட்ட மா அதிபரிடமிருந்து காவல்துறை மா அதிபருக்கு 130 பக்கங்களைக் கொண்ட அறிக்கை!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியமான சந்தேகநபர்கள் 42 பேருக்கு எதிரான சாட்சியங்களை எழுத்துமூலமாக உறுதிப்படுத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபருக்கு 130 பக்கங்களைக்கொண்ட அறிக்கையொன்றை அனுப்பியுள்ள சட்ட மா அதிபர், இவ்விடயத்தை தெரிவித்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, 5 பேர் தொடர்பான விசாரணைகள் முழுமை பெறவில்லை என்றும், இதற்கான விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்துமாறும் காவல்துறை மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes