இறக்குவானையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் ஒன்றை அகற்றும் நடவடிக்கைகள் பிரதேச மக்களின் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இறக்குவானை - தெனியாய பிரதான பாதையில் அமைந்துள்ள எலட்டன் பாலம் என அழைக்கப்படும் இந்தப் பாலம் சுமார் 116 வருட வரலாற்றைக் கொண்டது.
இந்த பாலத்தை வீதி அபிவிருத்தி பணிகளுக்காக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இவ்வாறு அப்புறப்படுத்தப்படும் பாலமானது, தொல்பொருள் பெறுமதிமிக்கது என்ற அடிப்படையில் அதனை அநுராதபுரம் - மெல்சிறிபுர பகுதியில் மீள நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இறக்குவானையின் அடையாளமாகக் காணப்படும் இந்த பாலத்தை அப்புறப்படுத்த அங்கு எதிர்ப்புக்கள் வெளியாகின.
இதன்படி, இறக்குவானை மகா நாயக்க தேரர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் விடயம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
பாலத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் கூறியதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
அதன்பின்னர், காவல்துறையினரின் தலையீட்டில் பாலத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதையடுத்து, பாலத்தை அப்புறப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை வாகனங்களில் ஏற்றி, அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெய்ன்
Local
11 July 2026
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்,இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?
Local
11 July 2026
பேச்சுக்கு தயார்! ஆனால் போர் நிறுத்தம் முடிந்து விட்டது- ட்ரம்பின் அறிவித்தல் ஈரானும் பதிலடி!
Local
11 July 2026
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்: அரசாங்கம் நடவடிக்கை
Local
11 July 2026
நடுவானில் கழன்ற வானூர்தி ஜன்னல்: பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பிய பயணி!
Local
11 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்றும் வீழ்ச்சி!
Local
11 July 2026
திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை; நாடாளுமன்றத்தில் நிதிக் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!
Local
10 July 2026
கிழக்குக் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஆபத்தில்; கடற்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை!
Local
10 July 2026
நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க ஆலோசனை
Local
10 July 2026
பண்ணைகளில் இருந்து தப்பியோடிய ராஜநாகங்கள்!
Local
10 July 2026