General29 April 2026

கட்சிப் பொறுப்புகளை துறந்தார் எரான்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மீளமைப்புக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு மற்றும் முகாமைத்துவக் குழு ஆகியவற்றிலிருந்து தாம் விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கட்சிக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இன்று விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான விசேட குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டார்.

எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்கால குழுவில் ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி, பிரகாஷ் ஷாஃப்டர், துஷிர ரதெல்ல, அவந்தி கொலம்பகே, உபுல் குமாரப்பெரும மற்றும் தினல் பிலிப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes