General30 April 2026

குளித்துக்கொண்டிருந்த பெண் மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் குளிப்பதை இரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்சார் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக குறித்த உணவகத்தில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி, குளியலறையின் இடைவெளிகள் ஊடாக மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, குறித்த வீரர்கள் அதே விடுதியில் இருந்த ஆண்களையும் இவ்வாறே இரகசியமாகப் படம்பிடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க..

மின்சாரக் கட்டண உயர்வு: நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? வெளியான முக்கிய தகவல்


இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காணொளிகள் இணையத்திலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பதிவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு வீரர்களும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களைப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை கிரிக்கெட் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான இச்சம்பவம் விளையாட்டுத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பார்க்க.. 


Related recommendation
Hiru TV News | Programmes