இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நாட்டின் நகர்ப்புற மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை போதனா மருத்துவமனையின் இரைப்பை குடல் விசேட மருத்துவ நிபுணர் பியல் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற மக்களிடையே இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் அன்றாட உடல் உழைப்பு குறைதல் ஆகியவையே இதற்குக் காரணம் என மருத்துவர் ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு, கம்பஹா போன்ற நகரங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான நோயாளிகள் தற்செயலாகவே இந்த நோயைக் கண்டறிகின்றனர். வேறு நோய்களுக்காக மருத்துவரை நாடும்போது அல்லது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்யும்போது கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது.
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவது நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற தொற்றாத நோய்களுடன் நெருங்கிய தொடர்புடையது.
இதேவேளை, எம்பிலிபிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தனுஷி ஆர்.அபேநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், காஸ்ட்ரைடிஸ் எனப்படும் வயிற்றுப் புண் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம் என்றார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, முறையான மருந்துகள் மற்றும் பாதிப்பை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதையும் பார்க்கவும்..
Latest News
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை : தீர்வின்றி முடங்கிக் கிடக்கும் 6 முக்கிய சிக்கல்கள்
Local
30 April 2026
செல்லப்பிராணிகளுடன் வானூர்திப் பயணம் - பிரித்தானியாவில் வலுக்கும் புதிய சட்டத்திற்கான கோரிக்கை!
Local
30 April 2026
பாம் எண்ணெய் இறக்குமதியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நஷ்டம்
Local
30 April 2026
இலங்கையில் 2010 இற்குப் பின் பிறந்தவர்களுக்கு புகையிலை தடை?
Local
30 April 2026
ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம் - வைரலாகும் ஹிட்மேனின் ஏக்கம்
Local
30 April 2026
நாய் ரோபோக்களாக உருமாறிய தொழில்நுட்பக் கோடீஸ்வரர்கள் - பேர்லினில் வினோதக் காட்சி!
Local
30 April 2026
இன்று தங்கத்தின் விலை குறைந்தது : நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
Local
30 April 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்
Local
30 April 2026
ஆடம்பர வாழ்க்கைக்காக மகனுக்குப் புற்றுநோய் என நாடகம் : தாய்க்கு கிடைத்த தண்டனை!
Local
30 April 2026