International01 May 2026

18 அடையாள அட்டைகள், 6 வங்கி அட்டைகளுடன் பிடிப்பட்ட பெண் - பின்னணி என்ன?

கனடாவின் சூ செயின்ட் மேரி பகுதியில், தனது பெயரில் இல்லாத 18 அடையாள அட்டைகள் மற்றும் 6 வங்கி அட்டைகளை வைத்திருந்த 34 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி காலை ஈஸ்ட் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண், முன்னதாகப் பெற்றிருந்த பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரிடம் மற்றவர்களின் பெயரிலான அடையாள அட்டைகளும் வங்கி அட்டைகளும் இருந்தது கண்டறியப்பட்டதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, மற்றவர்களின் அடையாள ஆவணங்களை வைத்திருந்தது, பிறருடைய கடன் அட்டைகளை வைத்திருந்தது மற்றும் பிணை நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஏப்ரல் 30 அன்று காவல்துறை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்தப் பெண், வரும் ஜூலை 20ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க..


Related recommendation
Hiru TV News | Programmes