General06 May 2026

உரும்பிராயில் ஸ்ரீ சபா ரத்தினத்தின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல்: செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவரும் ஈழப் போராட்டத்தின் முக்கிய தளபதியுமான ஸ்ரீ சபா ரத்தினத்தின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

கடந்த 1986 ஆம் ஆண்டு உரும்பிராய், அன்னங்கை பகுதியில் வைத்து ஸ்ரீ சபா ரத்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் உயிரிழந்த அதே இடத்தில், இன்று காலை இந்த நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீ சபா ரத்தினத்தின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes