General07 May 2026

"மலையக மக்களுக்காக ஒரு நிமிடம் கூட பேச அனுமதிக்காவிட்டால் இந்த சபை எதற்கு?" - அர்ச்சுனா எம்.பி கேள்வி

மலையக மக்களுக்காக ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க  முடியாவிட்டால் எதற்கு இந்த சபையும் ஆளும் கட்சியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

மலையகத்தில் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பேசுவதற்கு நேரம்  வழங்கப்படவில்லை.

அந்த வகையில் மலையக மக்களுக்காக ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியாவிட்டால் இந்த சபையும் ஆளும் கட்சியும் எதற்கு என அவர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்,

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பதாக பாதுகாப்புத் தரப்பு உறுதியளித்திருந்த போதிலும், அவை தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, கடந்த 48 மணிநேரத்திற்குள் மேலும் இருவர் தாக்கப்பட்டுள்ளதாக அவர் சபையில் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes