மட்டக்களப்பு, கரடியனாறு காவல் நிலையத்தில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
இந்தச்சம்பவம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்தமையால் வேறு காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணைக்கு பின்னரே அவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்றும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.
முன்னதாக, கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே மரணமானார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வவுணதீவு காவல்துறை குழுவொன்று கரடியனாறு காவல் நிலையத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த நபர் மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரது மனைவியால் கரடியனாறு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டிற்கு அமையவே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக, கரடியனாறு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
30 June 2026
அரச ஊழியர்கள் 20 கிலோ அரிசியைக் கூட கடனுக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - அரசாங்கம் மீது சாடல்
Local
30 June 2026
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு - 40க்கும் மேற்பட்டோர் காயம்!
Local
30 June 2026
"எரிபொருள் விலை குறைந்தாலும் மண்ணெண்ணெய் விலை குறையவில்லை!" - தமக்குரிய மானியம் யாருடைய பைகளுக்கு சென்றது என கடற்றொழிலாளர்கள் கேள்வி
Local
30 June 2026
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!
Local
30 June 2026
நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மொரோக்கோ வரலாற்று வெற்றி!
Local
30 June 2026
பொசன் தினத்திற்கு 20 ரூபாய் தன்சலா? இது போதாது... எங்கள் சம்பளம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை! - மக்கள் ஆதங்கம்
Local
30 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிவு!
Local
30 June 2026
தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய்
Local
30 June 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
30 June 2026