கல்வித் துறையில் காணப்படும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் போட்டித்திறனையும் வலுப்படுத்துவது மிக அத்தியாவசியமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய சர்வதேச விவகாரங்கள் நிறுவனத்தின் (AIIA) பிரதிநிதிகள் குழுவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
AIIA சபை உறுப்பினரும் தெற்காசிய நிகழ்ச்சித் திட்டத்தின் இணைத் தலைவருமான பிரகாஷ் மிர்ச்சந்தானி மற்றும் ரிச்சர்ட் அயர்ன் ஆகியோர் இக்குழுவை வழிநடத்தினர்.
இந்த குழுவில் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவைச் சேர்ந்த கல்வியாளர்கள், முன்னாள் இராஜதந்திரிகள், வர்த்தகத் தலைவர்கள், கொள்கை வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார சவால்கள், சமகால சமூக நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு அரசியலில் சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம் குறித்து இருதரப்பும் விரிவாகக் கலந்துரையாடினர்.
இலவசக் கல்வியும் சுகாதாரமும் நலன்புரி அரசின் அடித்தளமாக இருந்தாலும், தற்போதைய கல்வி முறைமை ஆண்டுதோறும் தொழில் சந்தைக்குப் பொருந்தாத, வேலைவாய்ப்பு பெற முடியாத ஆயிரக்கணக்கான பட்டதாரிகளையே உருவாக்குகிறது. மனப்பாடம் செய்யும் கல்வி முறை மற்றும் மொழி உரிமைகள் அரசியல்மயமாக்கப்பட்டிருப்பது கல்வித் துறையைப் பின்னோக்கித் தள்ளியுள்ளது.
நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்தாலும், தேசிய மற்றும் முன்னணி பாடசாலைகளே அதிக வளங்களை அனுபவிக்கின்றன. பெரும்பாலான பாடசாலைகள் குறைந்த வசதிகளுடனேயே இயங்குகின்றன.
ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க வேண்டிய நலன்புரி அரசு முறைமைக்குள்ளேயே, தற்போது அந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைந்துள்ளன.
ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க வேண்டிய நலன்புரி அரசு முறைமைக்குள்ளேயே, தற்போது அந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைந்துள்ளன.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்துகொண்ட சஜித் பிரேமதாச, ஜனநாயக ஆட்சிமுறை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.
Latest News
"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Local
13 June 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்ட திருத்தத்தால் 100 வரையான கைதிகளுக்கு பிணை: 'சூரியனின் விழுதுகளில்' சட்டத்தரணி தவராசா விபரிப்பு!
Local
13 June 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம்: 'நிரபராதிகளின் ஆயுட்காலம் சிறையிலேயே முடிகிறது' என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சாடல்
Local
13 June 2026
கல்விச் சீர்திருத்தமும் முதலீட்டுச் சூழலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியம்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!
Local
13 June 2026
இலங்கையில் இன்றும் தங்க விலை அதிகரிப்பு
Local
13 June 2026
கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை: கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்!
Local
13 June 2026
ரம்புக்கணையில் தொடருந்து தடம் புரண்டது!
Local
13 June 2026
கால்பந்து போட்டித் தொடர்: ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணி அமெரிக்கா சென்றடைந்தது !
Local
13 June 2026
பல பிரதேசங்களில் இன்றும் மழை: களனி, களு கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டங்கள் உயர்வு!
Local
13 June 2026
மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ணம்: இலங்கையை வீழ்த்தி வென்றது இங்கிலாந்து
Local
13 June 2026