General16 June 2026

யோஷித ராஜபக்ஷவின் மனு மீதான கட்டளை ஜூலை 3 ஆம் திகதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு மீதான விசாரணைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளதுடன், அதற்கான கட்டளையை ஜூலை மாதம் 3 ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

நிதித் தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி அவர் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் விடயங்களை முன்வைத்ததுடன், சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார விடயங்களை முன்வைத்தார்.

இதனையடுத்து விசாரணைகளை நிறைவு செய்த நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த முடிவை அறிவித்தது.
Related recommendation
Hiru TV News | Programmes