General16 June 2026

அரசிறைப் பாதுகாப்புக் கட்டளைகளுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம்: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை சம்மதம்

1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள இறைவரிப் பாதுகாப்புக் கட்டளைகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் இலக்குடன் சுங்கத் தீர்வை வீதங்களை முறைப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல முக்கிய சீர்திருத்தங்கள் இதன் மூலம் அமுல்படுத்தப்படவுள்ளன.

அதன்படி, இதுவரை 03 பிரிவுகளாக செயற்பட்டு வந்த சுங்கத் தீர்வை வீதங்கள், இனிவரும் காலங்களில் 0%, 10%, 20% மற்றும் 30% என 04 பிரிவுகளின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், தேசிய இறக்குமதி தீர்வை வரிக்கொள்கைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், உள்நாட்டு விவசாய மற்றும் கைத்தொழிற்துறையை ஊக்குவிப்புகளுக்காக புதிய தேசிய சுங்க ஒழுங்குமுறை முறையியலை அமுல்படுத்துவதற்கும் கடந்த 2026.02.23 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி, 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான 01/2026 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புக் கட்டளைகள், கடந்த 2026.03.03 ஆம் திகதிய 2478/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட அரசிறை பாதுகாப்புக் கட்டளைகளை, நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes