General20 June 2026

எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உலகளாவிய எரிபொருள் விலைகள் தற்போதைய அளவில் நீடித்தால், அதன் பலன்களை ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
 
எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
 
தற்போதைய நிலைமை குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் நலனுக்காக ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 100 மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ. 20 மானியம் ஏற்கனவே அரசாங்கம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
 
வழக்கமான சந்தையிலிருந்து பொருட்களை வாங்குவதைப் போல, எரிபொருள் கொள்முதலை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 
 
மாறாக, முறையான டெண்டர் நடைமுறைகள் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட விலையில் எரிபொருளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes