மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை காரணமாக, ஆபிரிக்க கண்டம் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய ஆபிரிக்க பிராந்திய பணிப்பாளர் ஸெய்ன் ஸெய்தானே தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் உரம் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனால், அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியானது ஆபிரிக்காவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் உற்பத்திச் செலவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த பொருளாதார அதிர்ச்சியிலிருந்து ஆபிரிக்க பிராந்திய நாடுகள் மீள்வதற்கு உதவுவதே தனது உடனடி முன்னுரிமை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்குத் திரும்புவதற்கு 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும் என வளைகுடா நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால், இந்தத் தடங்கல்கள் சீராவதற்கு சில மாதங்கள் எடுக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Latest News
ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்!
Local
23 June 2026
பாலஸ்தீன சிறுவர்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலில் – ஐநா குழு எச்சரிக்கை
Local
23 June 2026
மத்திய கிழக்கு நெருக்கடியால் ஆபிரிக்காவிற்கு ஆபத்தா? IMF எச்சரிக்கை!
Local
23 June 2026
கால்பந்து உலகக் கிண்ணம் - வரலாறு படைத்தார் லியோனல் மெஸ்ஸி
Local
23 June 2026
WhatsApp நிறுவனத்தின் தலைவர் திடீர் விலகல் - புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் இந்தியர் யார் தெரியுமா?
Local
23 June 2026
ஜூலைக்குள் ‘வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளரம்’ செயல்பாட்டுக்கு வருகிறது!
Local
22 June 2026
3 நாட்களுக்கு 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
Local
22 June 2026
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகம்: ஜனாதிபதி அறிவிப்பு
Local
22 June 2026
இலங்கையில் மே மாதத்தில் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு!
Local
22 June 2026
பயனடைந்தவரே குற்றவாளி: அருட்தந்தை சிறில் காமினியிடம் உதய கம்மன்பில 10 கேள்விகள்!
Local
22 June 2026