International28 June 2026

வெப்ப அலையினால் பிரான்சில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஐரோப்பா முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

வெப்ப அலையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆரம்பக்கட்ட தரவுகளை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இதேவேளை உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes