General03 July 2026

இலங்கையில் இன்று தங்கவிலை 4,000 ரூபாயால் அதிகரிப்பு

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (03) பவுணுக்கு 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (02) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 388,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes