International07 July 2026

கடனை அடைக்க ஒரு மாதக் குழந்தையைக் கடத்தி விற்ற குழுவினர் : 4 பெண்கள் அதிரடி கைது!

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில், முச்சக்கரவண்டி வாங்குவதற்காகப் பெற்றிருந்த 1 இலட்சம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், ஒரு மாதக் குழந்தையைக் கடத்திச் சென்று 1.5 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, கடத்தப்பட்ட குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், குழந்தை கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனைச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes