இலங்கையின் சுகாதார சேவையை வெறும் திருத்தங்களுக்கு அப்பால் சென்று, சர்வதேச தரத்திலான உயர்தர சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆரோக்கிய சுகாதார நிலையங்களை அமைப்பதன் மூலம் பிராந்திய சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச மருத்துவமனைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், பொதுமக்கள் குறைந்த செலவில் திறமையான மற்றும் தரமான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும்.
இதன் மூலம் தனியார் துறையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு சுமை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த அரசாங்கங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த மொனராகலை மாவட்ட மருத்துவமனையின் கட்டடத் தொகுதி, திருகோணமலை, அம்பாறை மற்றும் சிலாபம் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட 26 பெரும் கட்டுமான திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 48 கட்டுமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும், சுவசரிய சேவையை வலுப்படுத்துவதுடன், இனிவரும் காலங்களில் சர்வதேச தரத்திலான, நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நோயாளர் காவு வாகனங்களை மட்டுமே கொள்வனவு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள், பாடசாலை ஊடகக் கழகங்களை உருவாக்குதல் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்களும் அரசாங்கத்துடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய விசேட ஊடக மத்திய நிலையத்தை உருவாக்குதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், அஞ்சல் மற்றும் அரச அச்சகத் திணைக்களங்களை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
Latest News
மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை
Local
09 July 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
Local
09 July 2026
சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே அரசின் இலக்கு: ஜனாதிபதி
Local
09 July 2026
இலங்கையில் இன்று மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
09 July 2026
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது வழக்குத் தாக்கல்
Local
09 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
09 July 2026
எல் நினோ காலநிலை தாக்கம் - நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
Local
09 July 2026
டெங்கு பரவல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு
Local
09 July 2026
அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்
Local
09 July 2026
ஓய்வூதியதாரர்களுக்கான விசேட இணையவழி விழிப்புணர்வு தொடர் இன்று ஆரம்பம்
Local
09 July 2026