International14 July 2026

'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் : 4.41 இலட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) சார்பில், 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 4.41 இலட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான கேள்விப்பத்திரம் (Tender) கோரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ரூ.755.83 கோடி இந்திய மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளதுடன், 22 கரட் (916) தரத்தில், தலா ஒரு கிராம் எடையுடைய 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இந்த புதிய நலத்திட்டத்தை, செப்டெம்பர் 15ஆம் திகதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes