காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.
இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தது.
விசாரணையின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 20 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Latest News
கனேடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் காவல்துறை அதிரடி : வீட்டில் சிக்கிய திடுக்கிடும் பொருட்கள்!
Local
15 July 2026
மீண்டும் வருகிறது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 ’: களமிறங்கும் புதிய கதாநாயகன்!
Local
15 July 2026
பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரான் தாக்குதல்: பதற்றமான சூழல்
Local
15 July 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
Local
15 July 2026
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் பதவி விலகல்
Local
15 July 2026
காரைநகரில் கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் நகைகளுடன் இருவர் கைது!
Local
15 July 2026
16, 17 வயதுடையவர்களின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் : பிரித்தானியாவின் புதிய அதிரடி அறிவிப்பு
Local
15 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?
Local
15 July 2026
சில பகுதிகளில் இன்று மழை : பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை தொடர்கிறது!
Local
15 July 2026
அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு: பிரதிநிதிகள் சபையில் சட்டமூலம் நிறைவேற்றம்!
Local
15 July 2026