General23 July 2026

“காலிமுகத்திடல்” கைது நடவடிக்கை - தேசபந்து தென்னகோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2022ஆம் ஆண்டு “காலிமுகத்திடல்” போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

சமூகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes