General23 July 2026

வத்தளையில் துப்பாக்கி சூடு: திருகோணமலையில் விபத்து: இருவர் பலி

வத்தளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்த பகுதி திருமண மண்டபமொன்றில் இன்று (23) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த ஒருவரைக் இலக்கு வைத்து, உந்துருளியில் பயணித்த அடையாளம் தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும்,பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலையில் இருந்து ஹபரணை நோக்கி வெளிநாட்டவர் பயணித்த சிற்றூர்தி ஒன்றும், ஹபரணையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த உயர் ரக உந்துருளி ஒன்றும் இன்று மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதன்போது உந்துருளி எரிந்து நாசமாகியுள்ள நிலையில், அதனை செலுத்திச்சென்றவர்,காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes