லங்கா பிரீமியர் லீக்கில் நடந்ததாகக் கூறப்படும் போட்டி நிர்ணயம் தொடர்பான விசாரணையில், ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு தனது ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.
இதன்படி, ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் ஆண்ட்ரூ எப்கிரேவ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் சுதந்திரத் தலைவர் சுமதி தர்மவர்தன ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஏ.எஸ்.பி. சனக டி சில்வா ஆகியோரைச் சந்தித்துள்ளனர்.
இதன்போது நடைபெற்று வரும் விசாரணை மற்றும் ஐசிசியின் சாத்தியமான உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போட்டிகளை நிர்ணயம் செய்ய வீரர்களைத் தூண்ட முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா மற்றும் மற்றொரு இந்தியர் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 9.5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தில் இலங்கை அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடர்வதால், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் புலனாய்வு ஆதரவு உள்ளிட்ட ஐசிசியின் ஒத்துழைப்பை அமைச்சர் கமகே நேற்றைய சந்திப்பின்போது கோரியுள்ளார்.
Latest News
வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!
Local
25 July 2026
28 ஆவது அகவையில் சூரியன் எப் எம் : கொட்டகலையில் மரக்கன்று நாட்டும் நிகழ்வு
Local
25 July 2026
இந்தியாவில் கைதான இருவரையும் அழைத்துவர இலங்கை காவல்துறை விரைகிறது - வத்தளை சம்பவத்துடன் தொடர்பா?
Local
25 July 2026
போராட்டத்தைக் கைவிட்டது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
Local
25 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி - விஷ்மி, ஹர்ஷிதா சதமடித்து சாதனை!
Local
25 July 2026
ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் ரத்து: ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு!
Local
25 July 2026
ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!
Local
25 July 2026
6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டுத் திரைப்படம் பார்க்கச் சென்ற இளம் தம்பதி கைது!
Local
25 July 2026
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா!
Local
25 July 2026
அமெரிக்காவில் வீடொன்றில் தீப்பரவல்: 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உடலங்களாக மீட்பு!
Local
25 July 2026