லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் உள்ளட்ட இரு சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (27) நிராகரித்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.டபிள்யூ.எஸ். பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து கட்டளையிட்டார்.
தனது சேவைபெறுநர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணி தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
எனினும், குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களை வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை இலங்கை காவல்துறையின் விளையாட்டுத் தொடர்பான தவறுகளைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான மஞ்ஜோட் கல்ரா மற்றும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் யுவராஜ் புஷ்பா ஆகிய இரு இந்தியப் பிரஜைகளுமே
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் மேலும் தகவல்களைத் தெரிவித்த புலனாய்வு அதிகாரிகள், 2026 LPL தொடரின் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்கள் இருவரும் சந்தேகநபர்களாகக் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்குப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்களது ஆட்சேபனையை பதிவு செய்தனர்.

Latest News
"சூர்யா 48 திரைப்பட படப்பிடிப்பு!" – கயாடு லோகருடன் செம மாஸாக களமிறங்கிய சூர்யா
Local
29 July 2026
களனி ரஜ மகா விகாரையில் நடைபெற்ற 'ஹிரு ஊடக வலையமைப்பின் ராஜ தர்ம பிரதிபதா' மகா தான நிகழ்வு
Local
29 July 2026
முன்பதிவிலேயே கோடிகளில் குவிக்கும் ‘ஸ்பைடர் மேன்: திரையரங்குகளில் வசூல் வேட்டைக்குத் தயார்!
Local
29 July 2026
“வாழ்க்கை 44 வயதில் தான் தொடங்குகிறது” – தனுஷின் பிறந்தநாளில் த்ரிஷா பகிர்ந்த பதிவின் பின்னணி என்ன?
Local
29 July 2026
வவுனியா தனியார் மருத்துவமனைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
29 July 2026
வளிமண்டலவியல் திணைக்களம் அதிரடி எச்சரிக்கை!
Local
29 July 2026
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30) அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது. ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும் உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
Local
29 July 2026
இலங்கைத் தமிழ் மக்களைச் சந்திக்க ஆவல் : நடிகர் விஜய் ஆனந்த் உற்சாகம்!
Local
29 July 2026
கம்பளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
Local
29 July 2026
20.6 பில்லியன் டொலரைத் தொட்ட ஐ.பி.எல் வணிக மதிப்பு - முதலிடத்தில் தெறிக்கவிடும் ஆர்.சி.பி!
Local
29 July 2026