General28 July 2026

பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத்தீ - 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

பிரான்ஸின் போர்டோ நகருக்கு மேற்கே பரவி வரும் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்து வருவதாகக் கிரொண்டே பிராந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் 42,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன், பாதுகாப்பு கருதி சுமார் 220,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் 240 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 2,750 தீயணைப்பு வீரர்கள், 18 வான்படை வானூர்திகள், 1,500 இராணுவத்தினர் மற்றும் 1,440 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீயணைப்புப் பணியின் போது இதுவரை 88 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் மீண்டும் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes