நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வு வயது வரம்பை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயமாக அவசியமான விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெளிவாக சில பிரிவுகளை உள்ளடக்கியிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, அரசியலமைப்பின் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) மற்றும் 62(2) ஆகிய பிரிவுகளுக்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார்.
எனினும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியலமைப்பின் எந்தப் பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Latest News
குடும்பத் தகராறால் மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு, நஷ்டஈடு செலுத்த உத்தரவு!
Local
30 July 2026
பொருளாதார நெருக்கடி வாடகையைக் குறைக்க ஒரே கட்டிலைப் பகிர்ந்துகொள்ளும் சீன இளைஞர்கள்!
Local
30 July 2026
மூதூர் படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை!
Local
30 July 2026
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அரச பணி நியமன ரத்து: தமிழக அரசாங்கம் மேன்முறையீடு!
Local
30 July 2026
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகளுக்கு இணைய ஊடுருவல் அச்சுறுத்தல்!
Local
30 July 2026
ஈரானை மிகவும் கடுமையாக தாக்கப்போவதாக மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்!
Local
30 July 2026
நீதியமைச்சரை சந்தித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை
Local
30 July 2026
இலங்கையின் கடன் தரவரிசையில் முன்னேற்றம்: பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
Local
30 July 2026
சீனாவிடமிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஈரான் பெறுவதாக தகவல்!
Local
30 July 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்றிய 7 அம்ச தீர்மானம்!
Local
30 July 2026