காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத மனிதாபிமானப் பேரவலமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி ஹுசைனியா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற 36ஆவது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, பலர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாள் முழுவதும் அதன் வலியோடு வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அவர்கள் சிந்திய இரத்தம்தான் இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக மண்ணில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பாரிய இழப்புகளும் மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது எனவும், அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடமாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளதாகவும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல நூற்றாண்டு வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட ஹுசைனியா பள்ளிவாசல் உள்ளிட்ட மத மற்றும் பாரம்பரிய சொத்துக்கள் தொடர்பிலும், மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் காணிகள் தொடர்பிலும் உரிய வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்கள் மதிக்கப்பட வேண்டும்." என அவர் கூறினார்.
Latest News
மலையகக் கட்சித் தலைவர்களுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு: காணி உரிமை, வீட்டுத்திட்டம் குறித்து பேச்சு!
Local
06 August 2026
வலுவான எல் நினோ தாக்கத்தால் உலகளவில் மேலும் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை
Local
06 August 2026
அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க திட்டமிட்ட தேசிய திட்டம் அவசியம்: அமைச்சர் வலியுறுத்தல்
Local
06 August 2026
ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!
Local
05 August 2026
செம்மணியில் திறந்த நீதிமன்ற அமர்வு: புதிதாக மேலும் 8 என்புக்கூடுகள்; இதுவரை 489 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
Local
05 August 2026
ஹோர்முஸ் நீரிணை கப்பல் பாதை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!
Local
05 August 2026
சுரேஷ் சலே வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை!
Local
05 August 2026
ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு
Local
05 August 2026
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்
Local
05 August 2026
உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்
Local
05 August 2026