தொழில்துறை பங்காளர்களின் கோரிக்கைகளை அடுத்து, அதிவேகப் பாதைகளில் இயங்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மோட்டார் வாகனங்கள் (அதிவேகப் பாதைகள்) கட்டளையின் கீழ், அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசனப்பட்டிகள் இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்துப் பொருத்துவதற்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப சலுகைக் காலம் கடந்த ஜூன் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இந்த காலக்கெடுவை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஜூன் 17 ஆம் திகதியிட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் இக்கட்டளையில் திருத்தம் செய்து, சலுகைக் காலத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 வரை நீடித்தது.
நாடாளுமன்ற ஒப்புதலுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
Latest News
டொராண்டோ திரைப்பட விழாவில் அமலா பாலின் ஹாஃப்: சர்வதேச அளவில் மாஸ் காட்டும் புதிய படம்!
Local
07 August 2026
கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்த நடவடிக்கை: அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார
Local
07 August 2026
இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான் : முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள்
Local
07 August 2026
ஹாய் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? – வெளியீட்டு திகதி குறித்து குழப்பம்
Local
07 August 2026
பல்லேகலை – தும்பர போகம்பர சிறைச்சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு
Local
07 August 2026
நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணையும் நடிகை ஸ்ரீலீலா
Local
07 August 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!
Local
07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
07 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
Local
07 August 2026
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு
Local
07 August 2026