இஸ்ரேலின் உணவகம் (Restaurant) மற்றும் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவுகள் ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் (www.slbfe.lk) நாளை (10) திறக்கப்படவுள்ளன.
அதன்படி, உணவகத் துறைக்கான பதிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மொத்தம் 4,000 பேர் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கு 25 முதல் 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்க முடியும். சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலைக் கல்வி, நல்ல ஆங்கில அறிவு மற்றும் பாரம் தூக்குதல், நின்று வேலை செய்தல் போன்றவற்றுக்கான உடல் ஆரோக்கியம் என்பன அவசியமாகும்.
மேலும், விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ (பெற்றோர், மனைவி, பிள்ளைகள்) இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக் கூடாது.
அதேவேளை, புனரமைப்புத் துறைக்கான பதிவுப் பக்கம் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. ஜிப்சம் வேலைகள், மின்சாரப் பெட்டிகள் பொருத்துதல் மற்றும் கல் சுவர் கட்டுதல், நிறப்பூச்சு வேலைகள், டைல்ஸ் ஒட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12,000 தொழிலாளர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.
25 முதல் 45 வயதுடைய, 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியும் அடிப்படை ஆங்கில அறிவும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்னர் புனரமைப்புத் துறைக்கான தேர்வில் தோற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற போதிலும், பிற துறைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் திறமைகளை இஸ்ரேலியப் பிரதிநிதிகளே நேரடியாகப் பரிசோதிப்பார்கள் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு உண்மையிலேயே அனுபவமும் தகுதியும் உள்ள துறைக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Latest News
இன்று இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு : பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Local
12 August 2026
இந்திய கிரிக்கட் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் ஃபர்வீஸ் மஹ்ரூஃப் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
12 August 2026
இந்திய அணிக்குள் சிகையலங்கார நிபுணரான சிராஜ்!
Local
12 August 2026
ஏர் இந்தியா விமானிக்கு போதைப்பொருள் பரிசோதனையில் பாதக முடிவு: உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை வெளியீடு
Local
12 August 2026
14 ஆவது ஆசிய வலைப்பந்து தொடர்: இந்தியாவை 100-34 என வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்குத் தகுதி
Local
12 August 2026
தேவையற்ற தொலைபேசி விளம்பர அழைப்புகளுக்கு பிரான்ஸ் தடை
Local
12 August 2026
வட்டி வீதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை: இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தகவல்
Local
12 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கடத்தல்: சிறைச்சாலை அதிகாரி கைது
Local
12 August 2026
இலங்கைக்கான புதிய சீனத் தூதராக பதவியேற்கும் வேய் ஹ_வாசியாங்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதியேற்பு
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய கடிதம் வெளியானது
Local
12 August 2026