கருக்கலைப்புக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற பேரணியொன்றில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டமை தொடர்பில் சர்ச்சை உருவாகியுள்ளது.
சென்னையிலுள்ள கல்லூரியொன்றில் மெட்ராஸ் - மயிலாப்பூர் பேராயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 ஆவது தேசிய 'வாழ்வுக்கான பேரணியில்' தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிராகவும், பிறக்காத குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடாத்தப்பட்ட இந்தப் பேரணியில் உரையாற்றிய அவர், கருவுறும் போதே உயிர் உருவாகிவிடுகின்றது எனக் குறிப்பிட்டதுடன், பிறக்காத ஒவ்வொரு குழந்தைக்கும் கண்ணியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவின் மருத்துவ ரீதியிலான கர்ப்பக் கலைப்புச் சட்டத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்த இந்தப் பேரணியில் சபாநாயகர் கலந்துகொண்டமைக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அந்த நாட்டின் அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின் கீழ் பெண்களின் உடலியல் சுதந்திரமும் பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமையும் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சார்ந்த உயர் பதவியிலுள்ள ஒருவர் இதில் கலந்துகொண்டமை பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு சுகாதார அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், இந்தியாவில் தற்போதுள்ள சட்டத்தின்படி 20 வாரங்கள் வரை பெண்கள் சட்டப்பூர்வமாகக் கருக்கலைப்பு செய்ய முடியும் என்றும், பல மருத்துவச் சூழல்களில் கருக்கலைப்பு என்பது தவிர்க்க முடியாத மருத்துவ அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சபாநாயகரின் தனிப்பட்ட கருத்துக்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest News
‘தர்மன்’ திரைப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்
Local
12 August 2026
அருண்ராஜா காமராஜ் படத்தைக் கைவிட்ட விஷ்ணு விஷால் – கருத்து வேறுபாட்டால் முறிந்த கூட்டணி
Local
12 August 2026
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' - முன்பதிவில் புதிய சாதனை!
Local
12 August 2026
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் திடீர் மாற்றம் : அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
Local
12 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயல்கிறது - சஜித் சாடல்
Local
12 August 2026
காணாமல் போன பெண்ணை மீட்பதற்காக நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கை
Local
12 August 2026
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் விவகாரம் - ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த இறுதிக் கோரிக்கை
Local
12 August 2026
இன்ஸ்டாகிராமில் அதிக விருப்பங்களை குவித்த தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் – தனுஷ் முதலிடம்!
Local
12 August 2026
இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள்: சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை!
Local
12 August 2026
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்க வேண்டாம் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
Local
12 August 2026