இந்தியாவில் பல அதிசயங்களும் நூற்றாண்டுகள் கடந்த வரலாறும் கொண்ட ஆன்மீகத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகோனியாவில் அமைந்துள்ள 'கக்கன்மாத் சிவன் கோயில்' ஆராய்ச்சியாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு மர்மக் கோயிலாகக் காட்சி அளிக்கிறது.
பொதுவாக எந்தவொரு பெரிய கட்டமைப்பும் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதற்கு நடுவில் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற கலவைகளைக் கொண்டு பூசித் தான் கட்டப்படும். ஆனால், இந்தக் கோயில் எந்தவிதமான பசையோ, சிமெண்டோ இல்லாமல் வெறும் கற்களை மட்டும் கொண்டு சுமார் 115 அடி உயரத்தில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவித இணைப்புக் கலவையும் இல்லாமல் கட்டப்பட்டிருந்தாலும், இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளைக் கடந்து பல்வேறு வெள்ளம், புயல், காற்று மற்றும் நிலநடுக்கங்களைச் சந்தித்து இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. அருகில் இருந்த பல கட்டிடங்கள் அழிந்துவிட்ட போதிலும், இந்தக் கோயில் உறுதியாக நிற்பதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டறிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தக் கோயில் உருவாக்கம் குறித்து இரண்டு விதமான தகவல்கள் நிலவுகின்றன:
11-ஆம் நூற்றாண்டில் கச்சபகத வம்சத்தைச் சேர்ந்த மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதி, தீவிர சிவபக்தையாக இருந்ததாகவும், இவரது வேண்டுகோளின்படியே இந்த பிரம்மாண்ட சிவன் கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
மறுபுறம், சிவபெருமானின் கட்டளைப்படி பேய்களும் பூதங்களும் சேர்ந்து அசுர பலத்துடன் ஒரே இரவில் இந்தக் கோயிலைக் கட்டியதாக இந்தப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
அதிகாலை நெருங்கியதும் பேய்களுக்குரிய சக்தி குறைந்துவிடும் என்பதால், பாதியில் வேலைகளை அரைகுறையாக விட்டுவிட்டு அவை மறைந்துவிட்டதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன.
பல்வேறு மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த இந்தக் கோயில், தினமும் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு சரியாக மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது.
பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தொடரும் மர்மங்கள் காரணமாக, அதற்குமேல் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தக் கோயிலைச் முழுமையாகச் சுற்றிப் பார்த்து அதன் அழகை அனுபவிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும்.
Latest News
கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்
Local
15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
Local
15 August 2026
கைது செய்யப்பட்ட"ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு
Local
15 August 2026
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: நாணயசுழற்சியில் இந்திய அணி வெற்றி
Local
15 August 2026
காலி மைதானத்தில் தேசியக் கொடியேற்றிய இந்திய கிரிக்கெட் அணி
Local
15 August 2026
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!
Local
15 August 2026
இலங்கை – இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
Local
15 August 2026
பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை: காவல்துறை அதிரடி உத்தரவு!
Local
15 August 2026
விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா
Local
15 August 2026
வழமைக்குத் திரும்பியது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிப் போக்குவரத்து
Local
15 August 2026