General12 August 2026

மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை: 23 வயது இளைஞர் கைது


பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்நேவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினரும் வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 94 சிறிய பொதிகள் உள்ளிட்ட கஞ்சா கலந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் மொத்த எடை 9 கிலோ 296 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவனகல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கல்நேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes