கொஹுவலை பாலத்துக்கு அடியில் உந்துருளியில் நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் படம் தொடர்பாகப் போலிச் செய்திகளையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பரப்புவது சமூகத்துக்குப் பாரிய தீங்கை விளைவிப்பதுடன், இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகப் பயனர்கள் எந்தவொரு பதிவையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், 'பரிசோதியுங்கள், உறுதிப்படுத்துங்கள், பொறுப்புடன் பகிருங்கள்' (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், அதன் மூல ஆதாரம் உண்மையானதா எனப் பரிசோதிக்க வேண்டும் என்றும், நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி ஆதாரங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே பொய் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பயம் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Latest News
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு!
Local
13 August 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!
Local
13 August 2026
அமெரிக்க சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!
Local
13 August 2026
“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”
Local
13 August 2026
“காந்திக்கு ஆட்டுப்பால் தேடிக்கொடுத்த இலங்கை சிறுமி” - இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் அன்பளிப்பு!
Local
13 August 2026
ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவுனர் அபிஜீத் திப்கே அறிவிப்பு!
Local
13 August 2026
ஒரே நாளில் 400 திருமணங்கள்: ஆகஸ்ட் 23 இல் குருவாயூரில் அமையவிருக்கும் மெகா திருமணத் திருவிழா!
Local
13 August 2026
பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!
Local
13 August 2026
நிலவில் நிரந்தர மையம்: இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுத்த நாசா!
Local
13 August 2026
விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
13 August 2026