உலக கால்பந்து கூட்டமைப்பான பிஃபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு எதிராக ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க கால்பந்து கூட்டமைப்புகளுடன் இணைந்து ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டதற்கு கட்டார் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
கட்டார் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஹமாத் பின் கலீஃபா அல் தானி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசிய கால்பந்து கூட்டமைப்பு, இந்த விடயத்தில் தமது உறுப்பு நாடுகளுடன் எந்தவித அதிகாரப்பூர்வ அல்லது முறைசாரா ஆலோசனையும் நடத்தாமல் தன்னிச்சையாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளமை தொடர்பிலேயே கட்டார் குற்றம் சுமத்தியுள்ளது.
உலகக் கிண்ணம் உள்ளிட்ட பிஃபா போட்டிகளின் வணிக உரிமைகளில் 20வீத பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை முன்மொழிந்த நிலையில்,இன்ஃபான்டினோ பதவி விலக வேண்டும் என்று மூன்று கூட்டமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.
எனினும் இந்த எதிர்ப்பு காரணமாக இன்ஃபான்டினோ தமது முடிவை மாற்றிக்கொண்டார்.
இருந்தபோதும் குறித்த கூட்டமைப்புக்கள் தொடர்ந்தும் உலக கால்பந்தாட்டக்கூட்டமைப்பின் தலைவர் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் உலக கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் இன்ஃபான்டினோவுக்கு கட்டார், மொரோக்கோ உட்பட 6 அரபு நாடுகளின் கால்பந்து சங்கத் தலைவர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிஃபாவின் தலைவர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் ஆசிய கால்பந்து கூட்டமைப்பிற்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
Latest News
செம்மணி விவகாரத்தில் உண்மை முழுமையாக வெளிவரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு - சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை! -அரசாங்கம் திட்டவட்டம்
Local
18 August 2026
நீர்கொழும்பிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை
Local
18 August 2026
சிறுபோக பருவ நெல் கொள்முதல்: சிறு, நடுத்தர நெல் ஆலைகள் நிதியுதவி பெற மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
Local
18 August 2026
நில்திய தடாகப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்!
Local
18 August 2026
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு!
Local
18 August 2026
கிளிநொச்சியில் புலிகளின் பயிற்சி முகாம் இயங்குகிறதா? உண்மை என்ன? அரசாங்கம் தெளிவுபடுத்தல்!
Local
18 August 2026
இலங்கை வெற்றிபெற இன்னும் 288 ஓட்டங்கள் தேவை!
Local
18 August 2026
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை!
Local
18 August 2026
சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு
Local
18 August 2026