உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளது.
அரசத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது.
அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரசுத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.
இதில் பிரதிவாதி மொஹமட் பிர்தௌஸ் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக் கூறி அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
எவ்வாறாயினும், ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது.
எவ்வாறாயினும், ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது.
ஐந்தாண்டு காலப்பகுதியில் 547 நாட்களுக்கு அரசத் தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
இந்த நிலையில் வழக்கில் அரசத் தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாகின்றனர்.
இந்த நிலையில் வழக்கில் அரசத் தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாகின்றனர்.
Latest News
நில்திய தடாகப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்!
Local
18 August 2026
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு!
Local
18 August 2026
கிளிநொச்சியில் புலிகளின் பயிற்சி முகாம் இயங்குகிறதா? உண்மை என்ன? அரசாங்கம் தெளிவுபடுத்தல்!
Local
18 August 2026
இலங்கை வெற்றிபெற இன்னும் 288 ஓட்டங்கள் தேவை!
Local
18 August 2026
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை!
Local
18 August 2026
சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு
Local
18 August 2026
'கல்விப் பேரவை' நிறுவும் புதிய சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
இருவேறு வழக்குகளில் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குப் பிணை!
Local
18 August 2026
அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்?
Local
18 August 2026