General18 August 2026

முன்னாள் அமைச்சர் அகில விராஜுக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபர்கள் இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் பிணை நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகநபர்கள் இருவரினதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes