இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி , கடந்த 12ஆம் திகதி தனது இல்லத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருட்டு நோக்கில் மாணவர் இருவரும் குறித்த அதிபரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். எனினும், அதிபர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதைத் தொடர்ந்து, அவரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் .
இதற்கு முன்னர், மாணவர்களின் பைகளில் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் அவர்களை எச்சரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து கோவாவுக்குத் தப்பிச் சென்ற மாணவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் 154,000 ரூபாய் பணமும், திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் ஐபோன் மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாணவர்கள் குறுகிய காலத்தில் எளிதாகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest News
உலகக் கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர் பாராட்டு!
Local
06 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம் - திகதிகள் அறிவிப்பு!
Local
06 September 2026
"குழந்தைகளை நான்தான் வளர்க்கிறேன்... ஆனால் அவர்?" : பதிவின் மூலம் ஆர்த்தி கொடுத்த மறைமுக பதிலடியா? பின்னணியில் உள்ள உண்மை!
Local
06 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள், வெளியேறும் வாயில்களை இணைக்கும் வீதிகளை விரிவாக்க நடவடிக்கை
Local
06 September 2026
கூகுள் மொழிபெயர்ப்பின் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' வசதியில் இரு புதிய அம்சங்கள் அறிமுகம்
Local
06 September 2026
புதிய முகம்... புதிய கொள்கை...- 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப உருமாறும் ஐக்கிய தேசியக் கட்சி!
Local
06 September 2026
சர்வதேச கால்பந்து: கழக போட்டிகளில் 300 கோல்கள் அடித்து எர்லிங் ஹாலண்ட் புதிய மைல்கல் சாதனை!
Local
06 September 2026
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை
Local
06 September 2026
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - வானூர்தி சேவைகள் இரத்து
Local
06 September 2026
மடியில் விழுந்த தொலைபேசியும் எழுந்த சர்ச்சையும் : ரம்யா கிருஷ்ணன் குறித்து கொந்தளிக்கும் இணையவாசிகள்!
Local
06 September 2026