வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் (Remittances) அதிகரித்து வரும் சாதகமான போக்கின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 2028ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ள குறிப்பிடத்தக்க வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தல்களை கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நாணய வருவாய் மூலங்களைப் பல்வகைப்படுத்துவதற்கும், அதிகளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே பிரதி அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் ஊடாக நாட்டிற்குள் வரும் நிகர வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பாரம்பரியமற்ற துறைகள் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச தொழிலாளர் சந்தையில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய துறைகளுக்கு இலங்கை தொழிலாளர்களை வழிநடத்துவதற்கான நிதி மற்றும் பொருளாதார உத்திகளும் வகுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Latest News
நாட்டின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி - வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக அதிகரிப்பு
Local
23 August 2026
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!
Local
23 August 2026
இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி - ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!
Local
23 August 2026
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
Local
23 August 2026
"இவர்தான் மருத்துவர்!" - மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!
Local
23 August 2026
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026
நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை - முதலிடத்தில் பொலன்னறுவை!
Local
23 August 2026
தென்னாப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு!
Local
23 August 2026
மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!
Local
23 August 2026
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026