பாலுக்குப் பதிலாக தாவர எண்ணெய்கள் மற்றும் இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'எனலொக் பன்னீர்' (Analogue Paneer) எனும் செயற்கைப் பன்னீரை 'பன்னீர்' என்ற பெயரில் விற்பனை செய்ய இந்தியாவின் கர்நாடக மாநில அரசு ஓராண்டு காலத்துக்குத் தடை விதித்துள்ளது.
மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த செயற்கைப் பன்னீரைத் தயாரித்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அசல் பன்னீர் என்பது பாலில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும். ஆனால், பாலில் உள்ள கொழுப்புக்கு பதிலாகத் தாவர எண்ணெய் அல்லது கொழுப்புகளைக் கலந்து தயாரிக்கப்படும் பொருட்கள் 'பன்னீர்' என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படக் கூடாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகள் செயற்கைப் பன்னீரைப் பயன்படுத்தவோ, சேமிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
கேரளாவில் 100 மீட்டர் தொலைவில் சிறுத்தை – விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ஆபத்தான பயணம்!
Local
25 August 2026
அதிவேகப் பேருந்து நடத்துனர் உட்பட 9 பேர் போதைப்பொருளுடன் சிக்கினர்: மாகும்பரவில் அதிரடி சோதனை!
Local
25 August 2026
எம்.எஸ்.தோனி, மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்தார் ரிஷப் பண்ட் !
Local
25 August 2026
தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு முறைப்பாடு: அரசியலில் பெரும் புயல்!
Local
25 August 2026
தேவ்தத் படிக்கலின் தொடர் சதங்கள்: கம்பீரின் முடிவுகளுக்கு ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை!
Local
25 August 2026
"பஸ் லலித்" மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைப்பு!
Local
25 August 2026
இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு
Local
25 August 2026
சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா சிற்றூந்துகள் மீளப்பெறப்படுகின்றன!
Local
25 August 2026
தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் விரைவில் வழமைக்குத் திரும்பும்!
Local
25 August 2026
கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி விதிப்பேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!
Local
25 August 2026