நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (29) முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு சென்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவரது சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய லொத்தர் சபைக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றுக்கு அமைவாக, ரவி கருணாநாயக்கவை கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நேற்று முற்பகல் அதிகாரிகள் குழுவொன்று பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.
எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்காததால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவின் தரப்பினர் ஊடகங்களுக்கு விளக்கமொன்றையும் வழங்கியுள்ளனர்.
குறித்த தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலையில், அவரது சட்டத்தரணிகள் ஊடாக வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியிலேயே கையூட்டல் ஒழிப்பு விசாணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
Local
31 August 2026
நேபாளத்தில் அடையாளம் தெரியாத உடல்களை கூட்டாக அடக்கம் செய்யும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
57 வருட சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த 13 வயதுச் சிறுவனின் உடலமும் மீட்பு
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
Local
31 August 2026
இங்கிலாந்து தொடர்: இலங்கை ஒருநாள் குழாமில் மீண்டும் தசுன் ஷானக!
Local
31 August 2026
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்- சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வ விளக்கத்தை கோரினார் தயாசிறி ஜயசேகர
Local
31 August 2026
உலகின் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று: பிரதமர் மோடி பெருமிதம்!
Local
31 August 2026
தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர!
Local
31 August 2026
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரே வாரத்தில் சாதனை வருமானம்!
Local
31 August 2026